Page Loader
வித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ!
வித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா

வித்தியாசமாக டிஆர்எஸ் ரிவியூ கேட்ட ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2023
08:28 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவை 10 பந்துகளில் டக்கவுட் ஆகச் செய்து இந்தியா சிறப்பாகத் தொடங்கியது. இதற்கிடையே ரோஹித் ஷர்மாவின் ஒரு வீடியோ கிளிப்பை ஐசிசி தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தனது முதுகுக்குப் பின்னால் டி அடையாளத்தை உருவாக்கி, டிஆர்எஸ் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவரது இந்த செயல் கிரிக்கெட் வீரர்களிடையே ஆர்வத்தை தூண்டியதை அடுத்து வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கிடையே, ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சுக்கு தடுமாறி 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் பொறுப்பான ஆட்டத்தால் நிலைத்து நின்று ரன் குவித்து வருகிறது.

Instagram அஞ்சல்

Instagram Post