மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன்! ரோஹித் சர்மா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சதமடித்து, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது பேட்டர் ஆனார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கடந்த ஆண்டுதான் இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 212 பந்துகளில் 120 (15 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரன்கள் எடுத்தார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு இது முதல் சதமாகும்.
ரோஹித் சர்மா சாதனை
கேப்டனாக ரோஹித் சர்மா அடித்த சதங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ரோஹித் கேப்டனாக மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த நான்காவது வீரர் ஆனார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாபர் அசாம், இலங்கையின் திலகரத்ன தில்ஷன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ளனர். ரோஹித் ஏற்கனவே கேப்டனாக மூன்று ஒருநாள் சதங்கள் மற்றும் இரண்டு டி20 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்து புது சாதனை படைத்துள்ளார். 2022 இலங்கை தொடருக்கு பிறகு, ரோஹித் சர்மா சுமார் 11 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் தனது முதல் டெஸ்டில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.