நடுவருக்கு கூட கோலி சதமடிக்க ஆசை; வைரலாகும் காணொளி; யார் இந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ?
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (அக்.19) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்த நிலையில், விராட் கோலி தனது 48வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
விராட் கோலி 97 பந்துகளில் ஒரு சிக்சருடன் தனது சதத்தை எட்டினார். இருப்பினும், அவர் 80 முதல் 100 வரை ரன் குவித்தது கிட்டத்தட்ட ஒரு நாடகம் போல் இருந்தது என்றே கூறலாம்.
39வது ஓவரில் கோலி 73 ரன்களில் இருந்தபோது பேட்டிங்கை ஆரம்பித்த இந்தியா 42வது ஓவரில் வெற்றி பெறும்வரை அனைத்து பந்துகளையும் தானே எதிர்கொண்டார்.
குறிப்பாக, வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், 97 ரன்களில் இருந்த கோலி, மைல்கல்லை எட்ட ஒரு பவுண்டரியை எதிர்பார்த்தார்.
ODI World Cup Umpire want kohli to hit century
கோலியின் சதத்தை எதிர்பார்த்து காத்திருந்த நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ
2 ரன்கள் தேவை எனும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் நசும் அகமது லெக் சைடில் ஒரு பந்து வீசினார்.
இருப்பினும், நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ அதை வைட் என அறிவிக்கவில்லை. இது இந்திய டிரஸ்ஸிங் அறையில் இருந்த வீரர்களை கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவரும் கோலி சதமடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் எனத் தெரிகிறது.
இதையடுத்து, கோலி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். கோலியின் சிக்ஸருக்காக நடுவர் செய்த செயல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
எனினும், இதே ரிச்சர்ட் தான் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஷுப்மான் கில்லுக்கு சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.