சவூதி புரோ லீக்கில் விளையாடுவதற்காக ரியல் மாட்ரிட்டில் இருந்து விலகும் பிரபல வீரர்!
பலோன் டி'ஓர் கோப்பையை வென்ற ஒரு வருடத்தில், ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்சிமா அணியிலிருந்து விலகும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் சவூதி அரேபியாவை தளமாகக் கொண்ட கிளப்பில் இருந்து கரீம் பென்சிமா நல்ல ஊதியத்துடன் ஒரு ஆஃபரை பெற்றதாகக் கூறப்படுகிறது. அங்கு இரண்டு வருட ஒப்பந்தத்தில் இரண்டு சீசன்களில் விளையாட 400 மில்லியன் யூரோ ஊதியமாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசன் முடியும் வரை புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத நிலையில் உள்ள பென்சிமா, சீசன் முடிந்தவுடன் வெளியேறுவார்.
பிரபல கால்பந்து வீரர்களை கைப்பற்றும் சவூதி புரோ லீக்
கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவூதி புரோ லீக்கில் விளையாடும் அல்-நாசர் அணி கையகப்படுத்திய நிலையில், லியோனல் மெஸ்ஸியும் அங்குள்ள அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்து தற்போது பென்சிமாவையும் சவூதி புரோ லீக்கில் விளையாட உள்ளார். சவூதி புரோ லீக் கால்பந்து அணிகள் ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடும் முக்கிய வீரர்களை கைப்பற்றுவது இத்தோடு நிற்காது என்றும், மேலும் பல வீரர்கள் சவூதிக்கு இடம் பெயர்வர் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கரீம் பென்சிமா ரியல் மாட்ரிட் அணியில் 2009 முதல் விளைவடி வருகிறார். 35 வயதான அவர் 647 ஆட்டங்களில் 353 கோல்களை அடித்துள்ளார்.