ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஐபிஎல் 2023 சீசனின் 27வது போட்டியில் பஞ்சாப் கிங்சின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி விராட் கோலி மற்றும் டு பிளெஸ்ஸிஸின் அரைசதங்கள் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் முகமது சிராஜின் அபார பந்துவீச்சால் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது. ஐபிஎல் 2023ல் ஆறு போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சிராஜ் தற்போது அதிக விக்கெட் வீழ்த்தியவராக பர்ப்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளார். ஆரஞ்சு கேப்பையும் ஆர்சிபியின் டு பிளெஸ்ஸிஸ் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.