Page Loader
'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா?
சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா

'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா?

எழுதியவர் Sekar Chinnappan
May 11, 2023
07:43 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2022 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மிக மோசமான அனுபவத்தை பெற்ற ரவீந்திர ஜடேஜா பாதியிலேயே கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, அணியிலிருந்தும் வெளியேறினார். பின்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து தொடர்புகளையும் நீக்கி அதிரவைத்தார். இருப்பினும், இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆன்-பீல்டு செயல்திறன் ரசிகர்கள் மற்றும் நிபுணர்களால் பாராட்டப்பட்டாலும், சமூக ஊடகங்களில் அவரது சமீபத்திய செயல் ஒன்று ரசிகர்களிடையே 'பத்த வச்சிட்டையே பரட்டை' என்ற அளவில் ஹாட் டாப்பிக்காக மாறி வருகிறது.

jadeja like tweet which says he is sad

ஜடேஜா வருத்தத்தில் உள்ளதாக பதிவிடப்பட்ட ட்வீட்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டிக்கு பிறகு ஜடேஜாவிடம் தோனிக்கு சற்று முன்னதாக 7வது இடத்தில் பேட்டிங் செய்வது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு புன்னகையுடன் பதிலளித்த ஜடேஜா, "நான் சீக்கிரம் பேட் செய்ய வந்தால், ரசிகர்கள் அனைவரும் 'மஹி மஹி' என்று கோஷமிட்டு, நான் வெளியேறி எம்எஸ் தோனி வர அனைவரும் காத்திருப்பார்கள்." என்று கூறினார். இந்நிலையில் ராஜ்குமார் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், ஜடேஜா புன்னகையுடன் இதை கூறினாலும், உண்மையில் அவர் இதை கூறும்போது மனதில் வேதனையுடன் உள்ளார் என ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டை ஜடேஜா லைக் செய்து புதிய புயலை கிளப்பியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஜடேஜா சிஎஸ்கே மீது அதிருப்தியில் உள்ளார் என்ற ரீதியில் கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.