
'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்!
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லுமா வீழுமா என்ற கடைசி நிமிட திக்திக் நிலையில் இருக்க, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் இந்த வெற்றியை முழுக்க முழுக்க 'தல' தோனிக்காக மட்டுமே செய்ததாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக ஜடேஜாவை அவுட்டாக்கி வெளியேறுமாறு கூறி கடுப்பேற்றி வந்த நிலையில், தற்போது ஜடேஜா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
We did it for ONE and ONLY “MS DHONI.🏆 mahi bhai aapke liye toh kuch bhi…❤️❤️ pic.twitter.com/iZnQUcZIYQ
— Ravindrasinh jadeja (@imjadeja) May 30, 2023