Page Loader
தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் : 35 கிமீ பிரிவில் புதிய சாதனை படைத்த வீரர்கள்!
தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் 35 கிமீ பிரிவில் புதிய சாதனை படைத்த வீரர்கள்

தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் : 35 கிமீ பிரிவில் புதிய சாதனை படைத்த வீரர்கள்!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2023
07:10 pm

செய்தி முன்னோட்டம்

ராம் பாபூவும் மஞ்சு ராணியும் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதோடு, 35 கிமீ பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். பஞ்சாப்பின் சார்பாக களமிறங்கிய 23 வயதான மஞ்சு, 35 கிமீ ரேஸ் வாக்கிங் இலக்கை 2:57.54 மணி நேரத்தில் எட்டி 3 மணி நேரத்திற்குள் கடந்த முதல் இந்திய பெண்மணி என்ற சாதனை படைத்தார். மறுபுறம், உத்தரபிரதேசத்தின் ராம் பாபூ, தனது சொந்த தேசிய சாதனையாக 2:36.34 மணி நேரத்தை முறியடுத்து 2:31.36 மணி நேரத்தில் இலக்கை எட்டி புது சாதனை படைத்தார். எனினும், அவர்கள் இருவரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதியை எட்ட முடியவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய தடகள கூட்டமைப்பின் ட்வீட்