பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்கள் தகுதி
2023 உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய ரேஸ்வாக்கிங் வீரர்களான பிரியங்கா கோஸ்வாமி மற்றும் ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் நேஷனல் ரேஸ்வாக்கிங் போட்டியில் 20 கி.மீ ரேஸ்வாக்கிங்கில் தங்கம் வென்றதோடு குறிப்பிட்ட நேரத்திற்குள் இலக்கை எட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். முன்னதாக, 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரியங்கா, புடாபெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தரமான 1:29:20 வினாடிகளுக்கு முன்னதாக, 1:28:50 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். மறுபுறம் ஆண்களுக்கான ரேஸ்வாக்கிங்கிற்கான தகுதி 1:20.10 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆகாஷ்தீப் 1:19.55 வினாடிகளில் கடந்து வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.