Page Loader
CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்
CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்

CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 26, 2023
07:11 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 சீசனின் 37வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் சீசனில் ஏழு ஆட்டங்களில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ள நிலையில், ஆர்ஆர் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்ஆர் 12 வெற்றிகளையும், சிஎஸ்கே 15 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

CSK RR Players important numbers

ஐபிஎல் 2023 இல் சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் வீரர்களின் முக்கிய எண்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே ஏழு ஆட்டங்களில் 52.33 சராசரியில் 314 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சில், சிஎஸ்கேவின் துஷார் தேஷ்பாண்டே 12 விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை ஜோஸ் பட்லர் 244 ரன்களுடன் முன்னிலை வகிக்கிறார். பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் ஆர்ஆர் அணிக்காக 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஜோஸ் பட்லர் ஐபிஎல்லில் 144 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த போட்டியில் 6 சிக்சர்கள் அடித்தால் 150 என்ற மைல்கல்லை எட்டுவார். ருதுராஜ் கெய்க்வாட் 1,500 ரன்களை எடுக்க இன்னும் 23 ரன்கள் தேவையாக உள்ளது. சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் 300 பவுண்டரிகளை எடுக்க இன்னும் 8 பவுண்டரிகள் தேவையாகும்.