Page Loader
தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து!
தொடர் தோல்வியால் பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து

தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து!

எழுதியவர் Sekar Chinnappan
Feb 24, 2023
07:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அவரது தென்கொரிய கொரிய பயிற்சியாளர் பார்க் டே-சாங்கிடமிருந்து பிரிந்துவிட்டார்.. பார்க் டே-சாங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து சமீபத்திய போட்டிகளிலும் அவர் தோல்வியை தழுவி வருகிறார். இதற்காக பயிற்சியாளராக நான் பொறுப்பேற்கிறேன். எனவே அவர் ஒரு மாற்றத்தை விரும்பியதால், புதிய பயிற்சியாளரிடம் செல்வதாகக் கூறியுள்ளார். அவருடைய முடிவை மதித்து பின்பற்ற முடிவு செய்தேன்" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பிவி சிந்து, மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பிற்காக முன்னாள் மலேசிய வீரர் ஹபீஸ் ஹாஷிமிடம் பயிற்சி பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Instagram அஞ்சல்

பார்க் டே-சாங் இன்ஸ்டாகிராம் பதிவு