LOADING...
துபாயில் குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீராங்கனை; போர் பதற்றத்தால் முடங்கிய பிவி சிந்து
துபாயில் சிக்கிய பிவி சிந்து

துபாயில் குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீராங்கனை; போர் பதற்றத்தால் முடங்கிய பிவி சிந்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 02, 2026
12:35 pm

செய்தி முன்னோட்டம்

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தொடங்கவுள்ள புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக துபாய் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அவர் அங்கேயே முகாமிட்டுள்ளார். சனிக்கிழமை முதல் துபாயில் சிக்கியுள்ள சிந்து, விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பர்மிங்காம் செல்வதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்.

குண்டுவெடிப்பு

நூலிழையில் உயிர் தப்பினார்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகத் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிவி சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் இர்வான்ஸ்யா ஆதி பிரதாமா தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதிலிருந்து அவர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு கருதி அவர்கள் தற்போது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வீரர்கள்

பிற இந்திய வீரர்களின் நிலை

பிவி சிந்து துபாயில் முடங்கியுள்ள நிலையில், மற்ற இந்திய வீரர்கள் மாற்றுப் பாதைகள் மூலம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர்: லக்ஷ்யா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி: சிங்கப்பூர் வழியாக எவ்வித இடையூறுமின்றி பர்மிங்காம் சென்றடைந்தனர். லக்ஷ்யா சென் தனது முதல் சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான சீனாவின் ஷி யு கியூவை எதிர்கொள்கிறார். உன்னதி ஹூடா: இவரது விமானம் ரத்து செய்யப்பட்டதால், ஆப்பிரிக்கா வழியாக நீண்ட தூரம் பயணம் செய்து இங்கிலாந்து அடைந்துள்ளார். சாத்விக் - சிராக் ஜோடி: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கையாக இவர்கள் மலேசிய ஜோடியுடன் மோதவுள்ளனர்.

Advertisement

முதல் சுற்று

பிவி சிந்துவின் முதல் சுற்று போட்டி

தொடக்க சுற்றில் தாய்லாந்தின் சுபநிதா கெடெதொங்குடன் பிவி சிந்து மோத வேண்டியிருந்தது. ஆனால், திங்கட்கிழமை நிலவரப்படி துபாய் விமான நிலையம் மற்றும் வான்வெளி இன்னும் திறக்கப்படாததால், அவர் தொடரிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வீரர்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டால் போட்டி அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Advertisement

நீண்ட கால ஏக்கம்

இந்தியர்களின் நீண்ட கால ஏக்கம்

1980-இல் பிரகாஷ் படுகோன் மற்றும் 2001 இல் புல்லேலா கோபிசந்த் ஆகிய இருவர் மட்டுமே இதுவரை ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர். சாய்னா நேவால் மற்றும் லக்ஷ்யா சென் ஆகியோர் இறுதிப் போட்டி வரை சென்றும் தோல்வியடைந்தனர். இந்த முறை பிவி சிந்து மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப் போர்ச் சூழல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement