Loading...
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: முதன்முறையாக நுழைந்து பி.வி. சிந்து சாதனை
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டனில் முதல்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி பி.வி. சிந்து சாதனை படைத்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: முதன்முறையாக நுழைந்து பி.வி. சிந்து சாதனை

எழுதியவர் Vasuki
Oct 24, 2026
06:04 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பானின் ஹினா அகேச்சியைத் தோற்கடித்து தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். சுமார் 73 நிமிடங்கள் நீடித்த இந்த அனல் பறக்கும் அரையிறுதி ஆட்டத்தில் 21-10, 20-22, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றதன் மூலம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கை எதிர்த்துச் சாம்பியன் பட்டத்திற்காக விளையாட சிந்து தகுதி பெற்றுள்ளார்.

போரடி வெற்றி

கடைசி வரை நீடித்த கடுமையான போராட்டம்

ஜப்பானின் ஹினா அகேச்சிக்கு எதிரான அரையிறுதியில் களம் கண்ட இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, முதல் செட்டை 21-10 எனக் கைப்பற்றி அபாரமாகத் தொடங்கினார்.

இரண்டாவது செட்டில் சுதாரித்த அகேச்சி 20-22 என பதிலடி கொடுத்தார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் விறுவிறுப்பான மூன்றாவது செட்டில், சிந்து முன்னிலையில் இருந்தபோது அகேச்சி 15-15 எனச் சமன் செய்து கடும் நெருக்கடி தந்தார்.

எனினும், பதற்றமின்றி மிகச் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, அந்த செட்டை 21-16 என்ற கணக்கில் வென்று அசத்தலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி முத்திரை பதித்தார்.

இறுதி போட்டி

ஆன் சே யங்குடன் பலப்பரீட்சை

இந்த அபார வெற்றியின் மூலம் சூப்பர் 750 தொடரான பிரெஞ்ச் ஓபனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிந்து, 2023 மார்ச் மாதத்திற்குப் பிறகு மீண்டும் உலகத் தரவரிசையில் டாப் 7 இடத்திற்குள் நுழையவுள்ளார்.

மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை 21-12, 21-19 என்ற நேர் செட்களில் வீழ்த்திய தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங்கை, சிந்து இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறார்.

சர்வதேச அரங்கில் இதுவரை ஆன் சே யங்குடன் மோதிய 10 போட்டிகளிலுமே சிந்து தோல்வியடைந்துள்ள நிலையில், அந்தத் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பட்டத்தைக் கைப்பற்ற சிந்துவிற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT