இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பிஆர் ஸ்ரீஜேஷ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் வியாழன் (ஆகஸ்ட் 8) பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பாரிஸில் ஸ்பெயின் அணிக்கு எதிராக நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்காக போட்டிக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், இதுவே தனது இறுதிப்போட்டி எனக் கூறிய ஸ்ரீஜேஷ், சமூக ஊடக பக்கத்தில் உணர்ச்சிகரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பிஆர் ஸ்ரீஜேஷ் 2004இல் ஜூனியர் அணியுடன் இந்தியாவுக்காக தனது பயணத்தைத் தொடங்கினார். 2006இல் சீனியர் அணியில் இடம்பிடித்தார். ஆரம்பத்தில் வெவ்வேறு நிலைகளில் விளையாடினாலும், 2011 முதல் இந்திய சீனியர் அணியின் நிரந்தர கோல்கீப்பராக மாறினார். அதன் பிறகு, ஸ்ரீஜேஷ் இதுவரை 4 ஒலிம்பிக்கில் பங்கேற்று 2021இல் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.