Page Loader
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

எழுதியவர் Sindhuja SM
Jun 30, 2024
01:20 am

செய்தி முன்னோட்டம்

இன்று டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, "சாம்பியன்ஸ்! நமது அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலாக வென்றுள்ளது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது," என்று ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும், இந்திய அணிக்காக ஒரு வாழ்த்து வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியா 

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து 

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் ட்விட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "ஒருபோதும் தளராத மனப்பான்மையுடன், கடினமான சூழ்நிலைகளை சமாளித்து, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி, டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு அசாதாரண வெற்றியாகும். டீம் இந்தியா உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்!" என்று கூறியுள்ளார். இவர்களை தவிர, எதிர்க்கட்சித் தலைவரும் ரேபரேலி எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணைத் தலைவர் ஜட்கீப் தங்கர் ஆகியோரும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.