Page Loader
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ

எழுதியவர் Sekar Chinnappan
Apr 10, 2023
07:59 pm

செய்தி முன்னோட்டம்

பிசிசிஐ அலுவலக ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக தினசரி 1,000 டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிசிசிஐ அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளின் அதிகரிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது கடந்த அக்டோபரிலேயே அமலுக்கு வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக 750 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இது தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிசிசிஐ ஆவணத்தின்படி, தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் இணைச் செயலாளர் உள்ளிட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்படும்.

பிசிசிஐ

இதர கொடுப்பனவுகள் குறித்த விபரம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இரண்டு பிரதிநிதிகள் உட்பட பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலின் உறுப்பினர்கள் தங்கள் காலாண்டு கூட்டங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40,000 மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் 500 அமெரிக்க டாலர்கள் பெறுவார்கள். மேலும் பிசிசிஐ அதன் மாநில அலகுகளின் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளை மாற்றியமைத்துள்ளது. அவர்கள் இப்போது உள்நாட்டு பயணத்தின் போது ஒரு நாளைக்கு ரூ 30,000 மற்றும் வெளிநாட்டு பயணத்தின் போது 400 அமெரிக்க டாலர்கள் பெறுவார்கள். ஆடவர் மற்றும் பெண்கள் தேசிய அணிகளின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் கூட்டங்களுக்காக தலா ரூ.3.5 லட்சம் வழங்கப்படும்.