குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 6 பெரிய சாதனைகள்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இன் 18வது போட்டியில் மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) ஆறு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தோற்கடித்தது.
இதில் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார்.
ஜிடி அணியின் அபார பந்துவீச்சில் தடுமாறிய பிபிகேஎஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
154 ரன்களை சேஸ் செய்த ஜிடி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை அமைத்தாலும், இடையில் பிபிகேஎஸ் பந்துவீச்சில் தடுமாறினர்.
எனினும் கடைசி ஓவர் வரை போராடி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இதில் ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார்.
6 new records happened in gt vs pbks
குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்
ககிசோ ரபாடா ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். மேலும் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஷுப்மான் கில் ஜிடிக்காக 600 ரன்களை அடித்து, இந்த மைல்கல்லை எட்டிய முதல் பேட்டர் ஆனார்.
ரஷித் கான் முகமது ஷமியை பின்னுக்குத் தள்ளி ஐபிஎல்லில் ஜிடிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் ஆனார்.
ஜிடி இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல்லில் சேஸிங் செய்த 12 ஆட்டங்களில் 11ல் வெற்றி பெற்றுள்ளது.
அர்ஷ்தீப் சிங் இர்பான் பதானை சமன் செய்து ஐபிஎல்லில் பிபிகேஎஸ் அணிக்காக ஐந்தாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார்.
மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா பிசிஏ மைதானத்தில் பிபிகேஎஸ் அணிக்கு இது 27வது தோல்வியாகும்.