ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 100 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் 18வது போட்டியில், மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்தார்.
இதன் மூலம் இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ரபாடா, ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐந்தாவது ஓவரில் விருத்திமான் சாஹாவை அவுட் செய்து ரபாடா தனது 100வது ஐபிஎல் விக்கெட்டை எடுத்தார்.
1,438 பந்துகளை வீசி ரபாடா மிக வேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
fastest 100 wicket takers in ipl
அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை இரண்டாவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளி ரபாடா முதலிடம் பிடித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ, ஹர்ஷல் படேல் ஆகியோர் உள்ளனர். ரபாடா கடந்த மூன்று சீசன்களில் பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதில் இருந்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பந்துவீச்சு வலுவானதாக இருக்க வேண்டும் என்பதற்காக, ரபாடாவை ரூ.9.25 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.