AG2023-5000மீ.,தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல் செளத்ரி
சீனா நாட்டின் ஹாங்சோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இந்த விளையாட்டு போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி இதில் தற்போது நடந்து முடிந்த பெண்களுக்கான 5000மீ., தடகள போட்டியில் இந்திய வீராங்கனை பருல் செளத்ரி தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் இந்திய ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். இதனிடையே நேற்று(அக்.,3)நடந்த 3000மீ., ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இவர் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடவேண்டியவை ஆகும். இவரை தொடர்ந்து, பெண்களுக்கான 400மீ., தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் தனது இலக்கினை அடைந்து வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 4ம் இடத்தில் இந்தியா
இதற்கிடையே. இவர் கேரளா மாநிலத்தினை சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் 40 ஆண்டுகால வரலாற்று சாதனையினை சமன் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400மீ., தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் தனது இலக்கினை அடைந்தார் பி.டி.உஷா. இதனையடுத்து இன்று(அக்.,3) நடந்த மற்றொரு போட்டியான ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் 16.68மீ., நீளம் தாண்டி இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அதே போல் 800மீ., தடகள போட்டியில் முகமது அப்செல் என்னும் இந்திய வீரர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதன்படி, இந்தியா தற்போது 14 தங்கம், 26 வெண்கலம் மற்றும் 24 வெள்ளி பதக்கங்கள் வென்று 4 இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.