Page Loader
ஒலிம்பிக்கின் பிறப்பிடமான பண்டைய ஒலிம்பியாவில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது
இந்த ஜோதியை கிரேக் நடிகை மேரி மினா ஏற்றி வைத்தார்

ஒலிம்பிக்கின் பிறப்பிடமான பண்டைய ஒலிம்பியாவில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2024
10:08 am

செய்தி முன்னோட்டம்

ஒலிம்பிக் போட்டி தொடரின் தொடக்கத்தை குறிக்கும் பாரம்பரிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி, இன்று பண்டைய ஒலிம்பியாவில் நடைபெற்றது. இந்த ஜோதியை கிரேக் நடிகை மேரி மினா ஏற்றி வைத்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் பாரிஸில் நடைபெறுகிறது. வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில் உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கு முன்னதாக கடந்த 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

ஒலிம்பிக் ஜோதி

நாடுகள் இடையே கொண்டுசெல்லப்படும் ஜோதி

இந்த நிலையில் தான் கிரீஸில் ஜோதி ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் ஜோதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 68 நாட்களுக்கு பிறகு, வரும் ஜூலை 26ஆம் தேதி பாரிஸில் ஏற்றி வைக்கப்படும். அதோடு போட்டிகள் தொடங்கும். கிரீஸ் முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் ஜோதி, 11 நாட்களுக்கு பிறகு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி, ஏதென்ஸ் பனாதெனிக் மைதானத்தில் உள்ள பாரிஸ் கேம்ஸ் அமைப்பாளர்களிடம் ஒலிம்பிக் தீபம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது. இங்குதான், 1896ஆம் ஆண்டு நடந்த முதல் நவீன விளையாட்டு போட்டி நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளிடத்தில் போர் மூண்டுள்ள இந்த சூழலில், இத்தகைய போட்டிகள் உலக மக்கள் மத்தியில் சமாதான எண்ணத்தையும் நேர்மறை உணர்வுகளையும் வளர்க்கும் என ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

embed

ஒலிம்பிக் ஜோதி

The Olympic flame is lit for the #ParisOlympics! (via @Olympics)pic.twitter.com/dqwHchFN4n— NBC Olympics & Paralympics (@NBCOlympics) April 16, 2024