Page Loader
கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு
இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு

கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2023
03:01 pm

செய்தி முன்னோட்டம்

உஷ்னா ஷா என்ற பாகிஸ்தான் நடிகை சமீபத்தில் கோல்ப் வீரர் ஹம்சா அமீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அதில் மணமகள் உஷ்னா பாகிஸ்தான் பிராண்ட் வார்தா சலீம் வடிவமைத்த சிவப்பு நிற லெஹங்காவை அணிந்திருந்தார்.அதே நேரத்தில் மணமகன் ஹம்சா ஷெர்வானியை அணிந்திருந்தார். இதைப்பார்த்த பலரும் மணப்பெண் உஷ்னா, இந்திய கலாச்சாரத்தில் இருப்பது போல் உடை அணிந்துள்ளதாக பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சிலர், இந்திய கலாச்சாரத்தை பாகிஸ்தானில் இறக்குமதி செய்ய முயற்சிப்பதை நிறுத்துங்கள் என்றும் தாங்கள் முஸ்லிம்கள் மற்றும் தங்கள் மதம் இந்த வகையான பொருட்களை அணிய அனுமதிக்காது என்றும் காட்டமாக கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு