Page Loader
நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்தது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி
நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்தது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி

நியூசிலாந்துக்கு எதிராக வரலாறு படைத்தது பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 05, 2023
02:37 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்தின் டுனெடினில் செவ்வாயன்று (டிசம்பர் 5) நிடா டார் தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி டி20 தொடரில் நியூசிலாந்தை முதன்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டி20 போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த சாதனையை செய்துள்ளது. தற்போது இரண்டாவது வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, ஆசியா மற்றும் அயர்லாந்திற்கு வெளியே பாகிஸ்தான் மகளிர் அணி முதல் முறையாக டி20 தொடரை வென்றுள்ளது. மேலும், அக்டோபர் 2018க்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு தொடர் வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Pakistan women cricket team creates record by beating new zealand

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்

மூன்று டி20 கிரிக்கெட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. முன்னதாக, டிசம்பர் 3ஆம் தேதி நடந்த தொடரின் தொடக்க டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் வெற்றியை பெற்றது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாவது டி20யிலும் வெற்றி பெற்று தொடரை ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் தொடரையும் வென்றுள்ளது. மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 9ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், டிசம்பர் 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன.