சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மிகக் குறைந்த பவர்பிளே ஸ்கோர்; மோசமான சாதனை படைத்தது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025இன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளது.
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது.
வில் யங் 107 ரன்களும், டாம் லாதம் 118 ரன்களும் எடுத்தனர். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் ஒரு இன்னிங்ஸில் சதமடிப்பது இது ஐந்தாவது முறையாகும்.
மேலும், கிளென் பிலிப்ஸ் 61 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹரிஷ் ரவூப் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
321 ரன்கள் இலக்கு
260 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது
321 ரன்கள் எனும் சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் போராடியது. மேலும், முதல் 10 ஓவர்களில் 22/2 ஐ மட்டுமே பதிவு செய்தது.
இது சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் சொந்த மண்ணில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த பவர்பிளே ஸ்கோர் ஆகும்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பாகிஸ்தான் 25 க்கும் குறைவான பவர்பிளே ஸ்கோரைப் பதிவு செய்த மூன்றாவது நிகழ்வு இதுவாகும்.
அவர்களின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர்கள் 2013இல் ஜிம்பாப்வேக்கு எதிரான 18/2 மற்றும் அதே தொடரில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான 23/3 ஆகும்.
இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக 47.2 ஓவர்களில் 260 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.