
'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து எம்எஸ் தோனியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா வீசிய நேரான பந்து வீச்சை ஷுப்மன் கில் தவறவிட்ட நிலையில் எம்எஸ் தோனி 0.1 வினாடிகளில் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கினார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீரேந்திர சேவாக், "ஆஹா! வங்கியில் இருந்து ரூபாய் நோட்டுகளை கூட மாற்றலாம்.
ஆனால் விக்கெட்டுகளுக்குப் பின்னால் எம்எஸ் தோனியை மாற்ற முடியாது! எப்போதும் போல் வேகமாக செயல்படும் எம்எஸ் தோனி." என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், டைமிங்காக அதை ஒப்பிட்டு சேவாக் வெளியிட்ட இந்த பதிவு வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Wow ! One can change bank notes from bank but behind the wickets one cannot change MS Dhoni ! Nahi badal sakte .. As fast as ever MS Dhoni.
— Virender Sehwag (@virendersehwag) May 29, 2023
pic.twitter.com/zSRnz8DIXI