இதே நாளில் அன்று : 1975இல் முதல் முறையாக இந்தியா ஹாக்கி உலகக்கோப்பை வென்ற தினம்
இதே நாளில், 1975 மார்ச் 15 அன்று, கோலாலம்பூரில் நடந்த இறுதிப் போட்டியில், அஜித்பால் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. ஹாக்கியில் உலகக் கோப்பை 1971 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், முதல் தொடரில் அரையிறுதி வரையும், 1973இல் இறுதிப்போட்டி வரையும் முன்னேறியுள்ளது. 1975 ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு மாத முகாமில் இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் பயிற்சியின் கீழ் இந்தியர்கள் போட்டிக்கு தயாராகினர். இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.