உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் : கின்னஸ் சாதனை படைத்த பிர்சா முண்டா ஸ்டேடியம்
ஒடிஷாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம் என கின்னஸ் சாதனை படைத்த நிலையில், அதற்கான சான்றிதழ் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) வழங்கப்பட்டது. ரூர்கேலா மைதானத்தில் நடந்து வரும் எஃப்ஐஎச் புரோ லீக் போட்டியின் போது பட்நாயக் இந்த சான்றிதழைப் பெற்றார். ஹாக்கி உள்கட்டமைப்பில் இப்போது ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் இந்த மைதானம், 15 மாதங்களில் கட்டப்பட்டது மற்றும் 20,011 பேர் அமரக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் நீண்ட வருடங்களாக இந்திய ஹாக்கி அணிக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் தனது மாநிலத்தில் உருவாக்கி விளையாட்டை ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.