ODI World Cup Final Player of the Match : இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியல்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் மோத இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னர், 2019இல் நியூசிலாந்துக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், 2011இல் இலங்கைக்கு எதிராக எம்எஸ் தோனி மற்றும் 2003இல் இந்தியாவுக்கு எதிராக ரிக்கி பாண்டிங்கின் அதிரடி வரை, உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் சில மறக்கமுடியாத செயல்பாடுகளைக் கண்டது. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் 12 சீசன்களிலும், இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவர் வெற்றி பெற்ற தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற அனைத்து வீரர்களையும் இதில் பார்க்கலாம்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியல் (1975-1992)
கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்) - 102 ரன்கள் & 1/38 விக்கெட் vs ஆஸ்திரேலியா, லார்ட்ஸ், 1975 விவ் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 138* ரன்கள் vs இங்கிலாந்து, லார்ட்ஸ், 1979 மொஹிந்தர் அமர்நாத் (இந்தியா) - 26 ரன்கள் & 3/12 விக்கெட்டுகள் vs வெஸ்ட் இண்டீஸ், லார்ட்ஸ், 1983 டேவிட் பூன் (ஆஸ்திரேலியா) - 75 ரன்கள் vs இங்கிலாந்து, கொல்கத்தா, 1987 வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) - 33 ரன்கள் & 3/49 விக்கெட்டுகள் vs இங்கிலாந்து, மெல்போர்ன், 1992
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியல் (1996-2019)
அரவிந்த டி சில்வா (இலங்கை) - 107* ரன்கள் & 3/42 விக்கெட்டுகள் vs ஆஸ்திரேலியா, லாகூர், 1996 ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) - 4/33 விக்கெட்டுகள் vs பாகிஸ்தான், லார்ட்ஸ், 1999 ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 140* ரன்கள் vs இந்தியா, ஜோகன்னஸ்பர்க், 2003 ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) - 149 ரன்கள் vs இலங்கை, பிரிட்ஜ்டவுன், 2007 எம்எஸ் தோனி (இந்தியா) - 91* ரன்கள் vs இலங்கை, மும்பை, 2011 ஜேம்ஸ் பால்க்னர் (ஆஸ்திரேலியா) - 3/36 விக்கெட்டுகள் vs நியூசிலாந்து, மெல்போர்ன், 2015 பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 84* ரன்கள் vs நியூசிலாந்து, லார்ட்ஸ், 2019