
முழங்கால் காயம் காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் நோவக் ஜோகோவிச்
செய்தி முன்னோட்டம்
செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், முழங்கால் காயம் காரணமாக 2024 பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார்.
ஜோகோவிச் சமீபத்தில் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி போட்டியில் அவர் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளத் தயாராக இருந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளார்.
ஜோகோவிச் வெளியேறியதன் மூலம், ஜன்னிக் சின்னர் இப்போது புதிய உலகின் நம்பர் ஒன் ஆனார்.
செருண்டோலோவுக்கு எதிரான நான்காவது சுற்று ஆட்டத்தின் போது ஜோகோவிச் முழங்காலில் காயம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் பிரெஞ்சு ஓபனில் மேலும் விளையாட முடியுமா என்பதை அறிய செவ்வாயன்று MRI ஸ்கேன் செய்தார்.
ஸ்கேன்களில் ஜோகோவிச் வலது முழங்காலில் உள்ள மெனிஸ்கஸை கிழித்துக் கொண்டதால், போட்டித்தொடரிலிருந்து அவர் வெளியேற வேண்டியதாயிற்று.
ட்விட்டர் அஞ்சல்
பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகினார் ஜோகோவிச்
#BREAKING | பிரஞ்சு ஓபனில் இருந்து விலகினார் நோவக் ஜோகோவிச்#FrenchOpen | #NovakDjokovic | #Tennis pic.twitter.com/UWE6qux9Q2
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 5, 2024