ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்து டாரில் மிட்செல் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 22) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேரில் மிட்செல் சதமடித்தார்.
முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களுக்கு தடுமாறியபோது களமிறங்கிய டாரில் மிட்செல் ராச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மீட்டெடுத்தார்.
ராச்சின் ரவீந்திரா அரைசதம் கடந்து 75 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், டாரில் மிட்செல் கடைசி ஓவர் வரை களத்தில் நின்று சதமடித்து 130 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்க்க முடிந்தது.
Daryl Mitchell becomes highest run scorer against India in CWC
ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதம்
டாரில் மிட்செலுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இது ஐந்தாவது சதமாகும். அதே நேரத்தில் ஒருநாள் உலகக்கோப்பையில் இது அவருக்கு முதல் சதமாகும்.
இதற்கிடையே, 30 அல்லது அதற்கும் குறைவான இன்னிங்ஸ்களில் ஐந்து ஒருநாள் சதங்களை எடுத்த இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார்.
அவரது சகநாட்டவரான கான்வே 22 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தப் பட்டியலில் கேன் வில்லியம்சன் (56), நாதன் ஆஸ்ட்லே (64) ஆகியோர் கான்வேயைத் தொடர்ந்து உள்ளனர்.
மேலும், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் இதன் மூலம் மிட்செல் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர் 1975 உலகக்கோப்பையில் 114* ரன்கள் எடுத்த ஜிஎம் டர்னர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.