இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றி! தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து!
செய்தி முன்னோட்டம்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.
சனிக்கிழமை (ஏப்ரல் 8) நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணியின் பேட்ஸ்மேன் குஷால் மெண்டிஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார்.
183 ரன்கள் எனும் இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து கடைசி ஓவர் வரை போராடி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிம் சீஃபர்ட்
88 ரன்கள் குவித்த டிம் சீஃபர்ட்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டிம் சீஃபர்ட் மற்றும் சாட் போவ்ஸ் களமிறங்கினர். போவ்ஸ் 17 ரன்களில் அவுட்டாகி வெளியேறிய நிலையில், கேப்டன் டோம் லாதம் சீஃபர்ட்டுடன் கைகோர்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினார்.
லாதமும் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, சீஃபர்ட் அபாரமாக விளையாடி 88 ரன்கள் குவித்தார். சீஃபர்ட்டுக்கு டி20 கிரிக்கெட்டில் இது தான் அதிகபட்ச ஸ்கோராகும்.
எனினும் இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், கடைசியில் ஒரு பந்து மீதமிருந்தபோது 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது.