Loading...
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: 2 தனித்தனி அணிகளை அறிவித்தது நியூசிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக நியூசிலாந்து அணி 2 தனித்தனி அணிகளை அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: 2 தனித்தனி அணிகளை அறிவித்தது நியூசிலாந்து

எழுதியவர் Vasuki
Oct 11, 2026
12:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இரண்டு வெவ்வேறு கட்டங்களாகக் களமிறங்கும் நியூசிலாந்து அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, ஃபின் ஆலன், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையே அக்டோபர் 22 முதல் நவம்பர் 1 வரை 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து நவம்பர் 4 அன்று ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

சீனியர்களின் ரீ-என்ட்ரி

ரச்சின் ரவீந்திரா வருகை 

தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியிருந்த இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா, காயம் குணமடைந்து ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல், கடந்த 2023 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் மற்றும் அதிரடி தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட்டும் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

2 வெவ்வேறு அணிகள்

டெஸ்ட் தொடருக்காகப் பிரிக்கப்பட்ட அணிகள்

முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியின் முக்கிய டெஸ்ட் வீரர்கள் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான சிறப்புப் பயிற்சிக்காக வெலிங்டனுக்குப் பயணிக்கவுள்ளனர்.

இதன் காரணமாக 4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகளுக்கு 7 மாற்று வீரர்கள் கொண்ட புதிய அணி களமிறங்கவுள்ளது.

டாம் லாதம், டெவோன் கான்வே, டேரில் மிட்செல், மேட் ஹென்றி, கைல் ஜாமிசன் போன்ற முன்னணி வீரர்கள் முதல் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்கள்.

கடைசி இரு போட்டிகளில் ஃபின் ஆலன், லாக்கி பெர்குசன், மேட் பிஷர், கிறிஸ்டியன் கிளார்க் உள்ளிட்ட இளம் மற்றும் அனுபவ வீரர்கள் சான்ட்னரின் தலைமையில் விளையாடவுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 14பேர் கொண்ட அணி நவம்பர் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

அணி விவரம்

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி

முதல் 3 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி:

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங், பிளேர் டிக்னர்.

4 மற்றும் 5-வது போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி:

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மேட் பிஷர், லாக்கி பெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் செய்ஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேர் டிக்னர், வில் யங்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT