டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு உள்நாட்டு போட்டியில் முதல்முறையாக பங்குபெறுகிறார் நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா, மே-12 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்கிறார். இதன் மூலம், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உள்நாட்டு போட்டிகளில் போட்டியிடுகிறார். 26 வயதான நீரஜ் சோப்ரா தற்போது தோஹாவில் உள்ளார். அங்கு அவர், தோஹா டயமண்ட் லீக் தொடரில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அதன் பின்னர் இந்தியா வரும் நீரஜ், ஒடிசா புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் மே-12 முதல் மே 15 நடைபெறும் 27வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகளில் பங்கேற்கிறார். 2021 ஃபெடரேஷன் கோப்பைக்குப் பிறகு இதுதான் நீரஜ் சோப்ராவின் முதல் உள்நாட்டுப் போட்டியாகும்.
நீரஜ் சோப்ரா
Olympic Champion #NeerajChopra to Compete at Kalinga Stadium on May 15th 2024. 😍🥳 Dear Odias, Don't miss the chance. https://t.co/swAwoeSS43— ଅବୁଝା ପୁଅ (@AbujhaPua) May 8, 2024