Page Loader
2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை
2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை

2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2023
08:55 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலக தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐந்து தடகள வீரர்களில் ஒருவராக நீரஜ் சோப்ரா பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) உலக தடகள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில் சிறந்து விளங்கிய நான்கு நாடுகளை சேர்ந்த ஐந்து வீரர்கள் உலக தடகள விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உலக தடகள விருதுகள் 2023 இன் ஒரு பகுதியாக, டிசம்பர் 11 ஆம் தேதி உலக தடகள மேடையில் ஆண்டின் சிறந்த உலக தடகள வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

List of Players nominated for World best athletics player award

ஆண்டின் சிறந்த தடகள வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

நீரஜ் சோப்ரா - 2023இல் உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியன் ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். ரியான் க்ரூசர் - இவர் உலக சாம்பியன் பட்டம் வென்றதோடு, அதிக தூரம் எறிந்து உலக சாதனையும் படைத்துள்ளார். மொண்டோ டுப்லாண்டிஸ் - இவர் உலக சாம்பியன், உலக சாதனையுடன் டயமண்ட் லீக் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். கெல்வின் கிப்டம் - லண்டன் மற்றும் சிகாகோ மராத்தான் வெற்றியாளர், மாரத்தான் உலக சாதனையை முறியடித்தவர் போன்ற சிறப்புகளை கொண்டுள்ளார். நோவா லைல்ஸ் - உலக 100 மீ மற்றும் 200 மீ சாம்பியன், 200 மீ ஓட்டத்தில் ஆறு இறுதிப் போட்டிகளில் உலக சாம்பியன் மற்றும் யாராலும் தோற்கடிக்கப்படாதவராக உள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

உலக தடகள அமைப்பின் எக்ஸ் பதிவு