NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து!
    தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து

    ஒருநாள் உலகக்கோப்பை, SA vs NED: தென்னாப்பிரிக்காவிற்கு தோல்வியை பரிசாக அளித்த நெதர்லாந்து!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 17, 2023
    11:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலக கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் போட்டியிட்டன. மழையின் காரணமாக 50 ஓவர்கள் கொண்ட போட்டியானது 43 ஓவர்கள் கொண்ட போட்டியகாக குறைக்கப்பட்டது.

    மேலும், மழையின் காரணமாக சில மணி நேரங்கள் தாமதமாகவே தொடங்கியது போட்டி. இன்றைய போட்டிக்கான டாஸை வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்ப பவுமா.

    முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் முக்கிய பேட்டர்கள் அனைவருமே சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். நெதர்லாந்து அணியின் சார்பாகக் களமிறங்கிய முதல் 6 பேட்டர்களுமே 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர்.

    7வது பேட்டராகக் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    கிரிக்கெட்

    அதிரடி காட்டிய நெதர்லாந்து கேப்டன்: 

    முதல் இன்னிங்ஸில் 35வது ஓவருக்குப் பின்பு கைகோர்த்த நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் ரோல்ஃப் வேன் டர் மெர்வீ கூட்டணியானது அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியது.

    ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 200 ரன்களுக்குள்ளாகவே சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கூறிய கூட்டணியின் அதிரடி ஆட்டத்தின் பலனாக 200 ரன்களைக் கடந்தது.

    வேகமாக 29 ரன்களைக் குவித்ததுடன் ரோல்ஃப் மெர்வீ ஆட்டமிழந்துவிட, அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆர்யன் டட்டும் அதே அதிரடி பாதையில் பயணித்து 9 பந்துகளில் 23 ரன்களைக் குவித்தார்.

    இவர்களுடன் ஒருபக்கம் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸும் அதிரடியாக ஆட, முதல் இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்களைக் குவித்தது நெதர்லாந்து.

    உலக கோப்பை

    தென்னாப்பிரிக்கா.. எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்: 

    முதலில் கட்டுக்கோப்பாக பந்துவீசி நெதர்லாந்தின் ரன்களைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளையும் வீழ்த்திய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இறுதியில் ஓவர்களில் ரன்களை சற்று வாரி வழங்கி விட்டனர்.

    இதன் பயனாக 245 என்ற நல்ல இலக்கை நெதர்லாந்து எட்ட, 246 என்ற இலக்கோடு இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா.

    இந்த உலக கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஒன்றில் 300-க்கு மேற்பட்ட ரன்களையும், மற்றொரு போட்டியில் 400-க்கு மேற்பட்ட ரன்களையும் குவித்து அபாரமாக விளையாடியிருந்தது தென்னாப்பிரிக்கா.

    அதே அதிரடியைப் பின்பற்றி, சில ஓவர்கள் மீதமிருக்கவே இந்த போட்டியை தென்னாப்பிரிக்கா வென்று விடும் என எதிர்பார்க்க, சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர் தென்னாப்பிரிக் பேட்டர்கள்.

    ஒருநாள் உலகக் கோப்பை

    தென்னாப்பிரிக்க பேட்டர்கள் சொதப்பல்: 

    8, 10, 11 மற்றும் 12 என மிகக் குறுகிய ஓவர் இடைவெளிகளிளேயே தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது தென்னாப்பிரிக்கா.

    முந்தைய போட்டிகளில் பட்டாசாக வெடித்த தென்னாப்பிரிக்க பேட்டிங்கை இந்தப் போட்டியில் மிகச்சிறப்பாக கையாண்டனர் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள்.

    நெதர்லாந்தின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்களைப் போலவே தென்னாப்பிரிக்க அணியின் பேட்டர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

    ஆனால், இடையே டேவிட் மில்லரின் பொறுமையான ஆட்டம் தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்தது. எனினும், கைகொடுக்க வேறு பேட்டர்கள் இல்லாத நிலையில், அவரும் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாபிரிக்க அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

    கிரிக்கெட்

    நெதர்லாந்தின் முதல் வெற்றி, தென்னாப்பிரிக்க அணியின் முதல் தோல்வி: 

    போட்டியின் இறுதியில் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்து அதிர்ச்சித் தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா.

    ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தது தென்னாப்பிரிக்க அணி.

    கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரிலும், நெதர்லாந்து அணியுடனான கடைசி குழுச்சுற்றுப் போட்டியின் போது தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

    தற்போது அதே போல், ஒருநாள் உலக கோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறது நெதர்லாந்து கிரிக்கெட் அணி.

    நடப்பு உலக கோப்பைத் தொடரில் முதல் வெற்றியை நெதர்லாந்தும், முதல் தோல்வியை தென்னாப்பிரிக்காவும் பதிவு செய்திருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒருநாள் உலகக்கோப்பை

    ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள்; டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    INDvsAFG : அபார வெற்றி பெற்ற இந்திய அணி; புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் ஆப்கான் கிரிக்கெட் அணி
    Sports RoundUp : உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்; மேலும் பல முக்கிய செய்திகள் இந்திய கிரிக்கெட் அணி
    நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த ரசிகர்கள்; தடுத்து நிறுத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி விராட் கோலி

    கிரிக்கெட்

    AUSvsSA : ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை
    சையத் முஷ்டாக் அலி டிராபிக்காக கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம் சஞ்சு சாம்சன்
    AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி ஜஸ்ப்ரீத் பும்ரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025