
எம்சிசி கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தை கொண்டுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) கெளரவ வாழ்நாள் உறுப்பினர் பட்டியலில் புதிதாக 17 வீரர்களை சேர்ப்பதாக புதன்கிழமை (ஏப்ரல் 5) அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியாவைச் சேர்ந்த எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
எம்சிசியின் தலைமை நிர்வாகி மற்றும் செயலாளரான கை லாவெண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய சர்வதேச கோடைகாலத்திற்கு தயாராகும் நிலையில் எம்சிசியின் கெளரவ வாழ்நாள் உறுப்பினர்களின் புதிய குழுவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்று அறிவிக்கப்பட்டுள்ள பெயர்கள் நவீன காலத்தின் மிகச்சிறந்த சர்வதேச வீரர்களாகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
எம்சிசி ட்வீட்
Representing 🇮🇳
— Marylebone Cricket Club (@MCCOfficial) April 5, 2023
👏 Congratulations to these @BCCI greats, who have been awarded as Honorary Life Members of MCC.#CricketTwitter