நம்ம எம்எஸ் தோனியா இது? கலக்கலான ஹேர்ஸ்டைலுடன் ஆளே மாறிப் போயிட்டாரே!
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்எஸ் தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) எதிர்காலம் குறித்த தொடர்ச்சியான ஊகங்களுக்கு மத்தியில், அவர் வித்தியாசமான முறையில் கவனத்தை ஈர்த்துள்ளார். 43 வயதான எம்எஸ் தோனி தனது அட்டகாசமான நீண்ட முடிக்காக பிரபலமாக அறியப்பட்டாலும், தற்போது அந்த சிகை அலங்காரத்தை கைவிட்டு, புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளார். பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம், எம்எஸ் தோனிக்கு இந்த புதிய ஹேர்ஸ்டைலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். "மகேந்திர சிங் தோனி. எங்களின் தி ஒன் அண்ட் ஒன்லி தல" என்று தோனியின் புதிய ஹேர்ஸ்டைலைக் காட்டி ஆலிம் ஹக்கீம் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
எம்எஸ் தோனியின் புதிய ஹேர்ஸ்டைல்
ஐபிஎல்லில் எம்எஸ் தோனியின் எதிர்காலம்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் விளையாடாத இந்திய வீரர்களை அன்கேப்டு என்று தங்கள் உரிமையாளரால் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கும் விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து தோனி ஒரு அன்கேப்டு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதி தோனியின் உரிமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளைத் தவிர எஞ்சிய அனைத்து சீசன்களிலும், அந்த அணிக்காக எம்எஸ் தோனி விளையாடியுள்ளார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.