
CSK அணியின் வெற்றிக்கு வித்திட்ட MS தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்; வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியானார்.
இது குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில்,"எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (தோனி) விளாசிய அந்த மூன்று சிக்ஸர்கள் எங்களுக்கு பெரிதும் உதவியது. இரண்டு இன்னிங்ஸுக்குமான வித்தியாசம் அதுதான். இந்த மாதிரியான ஆடுகளங்களில் கூடுதலாக எடுக்கப்படும் அந்த 10-15 ரன்கள் அணிக்கு தேவையானது" என்றார்.
'தல' தோனி களத்தில் இறங்கி மட்டையை சுழற்றிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ட்விட்டர் அஞ்சல்
எம்.எஸ் தோனியின் வைரல் வீடியோ
#WATCH | மாஸ் எண்ட்ரி முதல் ஹாட்ரிக் சிக்ஸ் வரை... மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை ‘தல’ தோனி கடைசி ஓவரில் பொளந்து கட்டிய காட்சிகள்..!#SunNews | #MSDhoni | #MIvsCSK pic.twitter.com/6qx3L5D3ot
— Sun News (@sunnewstamil) April 15, 2024