LOADING...
சேப்பாக்கத்தில் 'தல' தரிசனம்: விளையாடாவிட்டாலும் அதிரடி காட்டிய தோனி; உருகிய CSK ரசிகர்கள்
காயம் காரணமாக எம்.எஸ்.தோனி ஆடும் லெவனில் இடம்பெறவில்லை

சேப்பாக்கத்தில் 'தல' தரிசனம்: விளையாடாவிட்டாலும் அதிரடி காட்டிய தோனி; உருகிய CSK ரசிகர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2026
07:22 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி ஹோம் மேட்ச்சில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது ஒட்டுமொத்த மைதானமும் அதிரும் வகையில் ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்தத் தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், காயம் காரணமாக எம்.எஸ்.தோனி ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. முன்னதாக டாஸ் போடும் நிகழ்வின் போது, ரவி சாஸ்திரி தோனி விளையாடுவாரா என்று சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்டபோதே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். பின்னர் தோனிக்கு இன்னும் காயம் குணமாகவில்லை என்பதை கெய்க்வாட் உறுதிப்படுத்தினார்.

ஆரவாரம்

சேப்பாக்கத்தை அதிரவைத்த நிமிடங்கள்

தோனி போட்டியில் விளையாடாவிட்டாலும், இன்னிங்ஸ் பிரேக்கில் சென்னை அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு அருகே குழுப் புகைப்படம் எடுப்பதற்காக மைதானத்திற்குள் வந்தனர். அப்போது எம்.எஸ்.தோனி மைதானத்திற்குள் நுழைந்த காட்சி பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட உடனே, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் முழுவதும் "தோனி... தோனி..." என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. நடப்புப் பருவத்தில் சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசிப் போட்டி இது என்பதால், தங்களின் 'தல' தோனியை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தத் தருணம் மிகப்பெரிய பரிசாக அமைந்தது. தோனி மைதானத்திற்குள் நடந்து வரும் இந்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement