நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்து வரும் யுஎஸ் ஓபன் 2023 காலிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்ததை, கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி நேரில் கண்டுகளித்தார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டருக்கு எதிராக 6-3 6-2 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மேலும் சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் டேனியல் மெட்வெடேவை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, போட்டியின் இடைவேளையின் போது, ஸ்டாண்டில் எம்எஸ் தோனி இரண்டு நண்பர்களுடன் அரட்டையடிப்பதையும் சிரிப்பைப் பகிர்ந்து கொள்வதையும் ஒளிப்பதிவாளர்கள் படம்பிடித்து பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்திய அணிக்காக விளையாடிய ஆரம்ப காலத்தில் வைத்திருந்ததைப் போல் நீளமான முடியுடன் அவர் தோற்றமளித்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது.