
2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
முகமது ஷமி தற்போது கணுக்கால் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருவதால், அவர் இந்த தொடரில் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.
கடைசியாக ஷமி ஒருநாள் உலகக் கோப்பையின் போது பங்கேற்றார்.
அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.
எனினும், இந்த ஆண்டின் இறுதியில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஷமி மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்ப்பதாகவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வங்க தேசத்தில், முகமது ஷமியை வேட்பாளராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
முகமது ஷமி விலகல்
#SportsUpdate | டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் முகமது ஷமி விலகல்#SunNews | #T20WorldCup2024 | #MohammedShami pic.twitter.com/TX92yawRIj
— Sun News (@sunnewstamil) March 11, 2024