Loading...
அதே கிளாஸ்கோ நகரம்! 12 ஆண்டுகளுக்குப் பின் சாதனை வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மீராபாய் சானு
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் மீராபாய் சானு

அதே கிளாஸ்கோ நகரம்! 12 ஆண்டுகளுக்குப் பின் சாதனை வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மீராபாய் சானு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
07:13 am

செய்தி முன்னோட்டம்

கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது சர்வதேச பயணத்தை தொடங்கிய அதே இடத்தில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 31 வயதான மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையும் தூக்கி, மொத்தமாக 190 கிலோ எடையை உயர்த்தி புதிய சாதனையைப் படைத்தார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஆதிக்கம்

தொடர் ஆதிக்கமும் புதிய திட்டமும்

2018 கோல்ட் கோஸ்ட் மற்றும் 2022 பர்மிங்ஹாம் தொடர்களில் தங்கம் வென்ற மீராபாய் சானு, இந்த முறையும் எதிராளிகளுக்கு பெரிய சவால் ஏதுமின்றி வெற்றியை உறுதி செய்தார்.

இருப்பினும், இந்தத் தொடரில் தனது முழுத் திறனையும் பயன்படுத்தாமல், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக தனது உடற்தகுதியை பாதுகாக்கும் உத்தியை அவர் கையாண்டார்.

ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம், உலக சாம்பியன் பட்டம் மற்றும் தொடர் காமன்வெல்த் தங்கங்களை வென்ற மீராபாய் சானுவிற்கு ஆசிய விளையாட்டு பதக்கம் மட்டுமே இன்னும் எட்டாக்கனியாக உள்ளது.

எதிர்வரும் நாகோயா ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்வதே தனது முதன்மை இலக்கு என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ADVERTISEMENT