நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அவர் தனது 13 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச வாழ்க்கையில் 198 ஒருநாள், 122 டி20 மற்றும் 47 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார்.
அவர் ஒரு சமயத்தில் ஒயிட்பால் கிரிக்கெட்டில் நியூசிலாந்து முக்கிய தொடக்க வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை மார்ட்டின் கப்டில் கொண்டுள்ளார்.
சர்வதேச புள்ளிவிவரங்கள்
நியூசிலாந்து அணிக்காக ஐந்தாவது அதிக சர்வதேச ரன்கள்
2009 மற்றும் 2022 க்கு இடையில், மார்ட்டின் கப்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக 367 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றார்.
கேன் வில்லியம்சன் (18,661), ராஸ் டெய்லர் (18,199), ஸ்டீபன் ஃப்ளெமிங் (15,289), மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் (14,676) ஆகியோருக்குப் பிறகு அவர் 35.90 சராசரியில் 13,463 ரன்களை எடுத்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்தாவது அதிக ரன் குவித்த வீரராக உள்ளார்.
கப்டில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 24 சதங்கள் மற்றும் 76 அரைசதங்களை அடித்தார்.
ஒயிட் பால் கிரிக்கெட்
ஒயிட் பால் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
கப்டில் 198 ஒருநாள் போட்டிகளில் 41.73 சராசரியில் 7,346 ரன்கள் எடுத்தார். அவரது எண்ணிக்கையில் 18 டன்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும்.
டெய்லர் (8,607) மற்றும் ஃப்ளெமிங் (8,007) ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கான அதிக ரன் குவித்த வீரராக மார்ட்டின் கப்டில் உள்ளார்.
மேலும், நியூசிலாந்துக்காக 3,000 டி20 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் கப்டில் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 122 டி20 போட்டிகளில் 31.81 (இரண்டு சதங்கள்) சராசரியாக 3,531 ரன்கள் எடுத்தார்.
தகவல்
நியூசிலாந்துக்கான இரண்டாவது அதிக டி20 போட்டிகள்
டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக முறை விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கப்டில் படைத்தார்.
இந்த விஷயத்தில் டிம் சவுத்திக்கு (126) அடுத்த இடத்தில் உள்ளார்.
வேறு எந்த வீரரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக 120 டி20 போட்டிகளுக்கு மேல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015 உலகக்கோப்பை
உலகக்கோப்பை 2015 இல் அதிக ரன்கள்
2015 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்காக கப்டில் விளையாடினார். அதில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
குறிப்பிடத்தக்க வகையில், கப்டில் ஒன்பது போட்டிகளில் 31.81 சராசரியில் 547 ரன்களுடன், போட்டியின் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.
அவரது ஸ்ட்ரைக்-ரேட் 104.58 ஆக இருந்தது. அவர் இரண்டு சதங்களையும் அதில் அடித்தார். இதில் அவரது சிறந்த ஸ்கோர் 237* அடங்கும்.
தகவல்
ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக தனிநபர் ஸ்கோர்
2015 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கப்டில் அடித்த 237* ஆடவர் ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக தனிநபர் ஸ்கோர் ஆகும்.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இது ஒரு இன்னிங்சில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.
உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கப்டில் பெற்றார்.