
லக்னோவில் வெளுத்து வாங்கும் மழை! எல்எஸ்ஜி -ஆர்சிபி போட்டி ரத்தாகுமா?
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (மே 1) லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வானிலை அறிக்கையை பொறுத்தவரை திங்கட்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே லக்னோவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதோடு, தற்போதும் நகரில் மழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் போட்டி தொடங்கும் சமயமான இரவு 7.30 மணிக்கு மழை பெய்தால் ஆட்டம் கைவிடப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் இரு அணிகளின் ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.
IPL 2023 RCB LSG Stats
ஐபிஎல் 2023 இல் ஆர்சிபி, எல்எஸ்ஜி புள்ளிவிபரம்
ஐபிஎல் 2023 சீசனை பொறுத்தவரை இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தலா 4 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் பாதி முடிந்த நிலையில், பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க அனைத்து அணிகளும் போராடி வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இதில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இதில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.