
ஐபிஎல் 2025: ஃபினிஷிங் சரியில்லாமல் எல்எஸ்ஜியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடந்த ஒரு வியத்தகு போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சேஸிங்கின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கடைசி ஓவரில் தேவையான ஒன்பது ரன்களை எடுக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஐடென் மார்க்ரம் 66 ரன்களும் ஆயுஷ் படோனி 50 ரன்களும் எடுத்தனர்.
மிடில் ஆர்டர்
ராஜஸ்தான் ராயல்ஸின் மிடில் ஆர்டர் சரிவு
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய சூப்பர் ஓவர் தோல்வியால் ஏற்கனவே தத்தளித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மீண்டும் ஒருமுறை தங்கள் கைக்கு எட்டிய போட்டியை முடிக்கத் தவறிவிட்டது.
அவர்களின் இன்னிங்ஸில் ஒரு திடமான தொடக்கம் இருந்தபோதிலும், மிடில் ஆர்டர் அழுத்தத்தின் கீழ் சரிந்தது, இது சீசனின் ஆறாவது தோல்விக்கு வழிவகுத்தது.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஸ்கோர் செய்தார்.
அதே நேரத்தில் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்கள் குவித்து பவர்பிளேயின் போது நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.