Page Loader
சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளி விபரம்; வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளி விபரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளி விபரம்; வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

எழுதியவர் Sekar Chinnappan
May 02, 2023
07:54 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டியில் புதன்கிழமை (மே 3) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாயி ஏகனா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். ஐபிஎல்லில் இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை, இரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று சம புள்ளிகளுடன் இருந்தாலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் எல்எஸ்ஜி மூன்றாவது இடத்திலும், சிஎஸ்கே நான்காவது இடத்திலும் உள்ளன.

possible milestones that players can reach

போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள மைல்ஸ்டோன்கள்

ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்ட ரவி பிஷ்னோய்க்கு இன்னும் ஒரு விக்கெட்டு மட்டுமே தேவை. டி20 கிரிக்கெட்டில் தீபக் ஹூடா 3,000 ரன்களை எட்ட இன்னும் 25 ரன்களும், அம்பதி ராயுடு 6,000 ரன்களை எட்ட இன்னும் 47 ரன்களும் தேவை. அம்பதி ராயுடு 6 பவுண்டரிகளை அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 500 பவுண்டரிகள் எனும் மைல்கல்லை எட்டுவார். இதே போல் அஜிங்க்யா ரஹானே இன்னும் 2 பவுண்டரிகளை அடித்தால் டி20 கிரிக்கெட்டில் 600 பவுண்டரிகள் எனும் மைல்கல்லை எட்டுவார். ஐபிஎல்லில் 1,000 ரன்களை எடுக்க சிவம் துபேவுக்கு இன்னும் 48 ரன்களும், பென் ஸ்டோக்ஸுக்கு இன்னும் 65 ரன்களும் தேவை.