Page Loader
ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 17, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு, ராகுல் டிராவிட் தலைமையிலான அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு, அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆகஸ்ட் 18, 20 மற்றும் ஆகிய தேதிகளில் மோத உள்ளது. ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சி குழுவுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதால், அயர்லாந்து தொடரில் விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி ஊழியர்கள் குழுவும் அவருடன் அயர்லாந்து செல்ல உள்ளது. அயர்லாந்து தொடருக்கு பிறகு, ஆசிய கோப்பை போட்டியின்போது மீண்டும் டிராவிட் தலைமையிலான குழு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.

vvs lakshmanan previous coaching instances

விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கவனிப்பது இது முதல்முறையல்ல

அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடரில் விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ள நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உள்ள சிதான்ஷு கோடக் மற்றும் ஹிருஷிகேஷ் கனிட்கர் (பேட்டிங்) மற்றும் டிராய் கூலி மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு) ஆகியோரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக செல்ல உள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், விவிஎஸ் லட்சுமணன் இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு, ஹர்திக் பாண்டியா தலைமையில் அயர்லாந்தில் நடந்த இரண்டு டி20 போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பை 2022 தொடரிலும் டிராவிட் இல்லாதபோது தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.