Page Loader
கனடா ஓபன் 2023 பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் லக்ஷ்யா சென்
கனடா ஓபன் 2023 பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் லக்ஷ்யா சென்

கனடா ஓபன் 2023 பட்டத்தை கைப்பற்றினார் இந்தியாவின் லக்ஷ்யா சென்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 10, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடந்த கனடா ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென் பட்டத்தை கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் சீனாவின் லீ ஷிஃபெங்கை எதிர்கொண்ட லக்ஷ்யா சென், 21-18, 22-20 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா ஓபனுக்குப் பிறகு, தனது தொழில் வாழ்க்கையின் இரண்டாவது சூப்பர் 500 பட்டத்தை, தற்போதைய ஆல் இங்கிலாந்து சாம்பியன் லீ ஷிஃபெங்கை வீழ்த்தி லக்ஷ்யா சென் வென்றார். இதற்கிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகானே யமகுச்சி, தாய்லாந்தை சேர்ந்த ரட்சனோக் இன்டனானை 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

லக்ஷ்யா சென் இறுதிப்போட்டியில் வெற்றி