Loading...
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடர்கிறேன்: டிரேட் வதந்திகளுக்கு கே.எல்.ராகுல் முற்றுப்புள்ளி
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடர்கிறேன் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடர்கிறேன்: டிரேட் வதந்திகளுக்கு கே.எல்.ராகுல் முற்றுப்புள்ளி

எழுதியவர் Vasuki
Sep 08, 2026
03:47 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து கே.எல்.ராகுல் வெளியேற உள்ளதாக வெளியான டிரேட் வதந்திகளுக்கு அவரும், டெல்லி நிர்வாகமும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். டெல்லி அணியிலேயே தாம் தொடர்ந்து விளையாட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ள ராகுல், புதிய சீசனுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2025 மெகா ஏலத்தில் டெல்லி அணியில் இணைந்த ராகுல், அணியின் முக்கிய வீரராகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்பதை டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் எக்ஸ் தளப் பதிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

ராகுல் - ஜிண்டால் உரையாடல்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் - ஜிண்டால் உரையாடல்

டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ராகுல் டெல்லி அணிக்கான முக்கியமான வீரர் என்றும், அணியை முன்னிறுத்தி விளையாடும் நல்ல மனிதர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அணிக்காக இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் இருப்பதாகவும், டெல்லிக்குப் பெருமை சேர்க்க இணைந்து உழைப்போம் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த ராகுல், நன்றி, வரவிருக்கும் அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ராகுல் வேறு அணிக்கு மாறுகிறார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணி

டெல்லி அணியில் ராகுலின் செயல்பாடு

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ராகுல், அக்‌ஷர் படேல் தலைமையிலான அணியில் முக்கிய பேட்டராகச் செயல்பட்டு வருகிறார்.

2025 சீசனில் 539 ரன்கள் குவித்த அவர், தொடர்ந்து 2026 சீசனில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 593 ரன்கள் குவித்தார்.

கடந்த மூன்று சீசன்களாகத் தொடர்ச்சியாக 500 ரன்களுக்கு மேல் குவித்து வரும் ராகுல், டெல்லி அணிக்கு பேட்டிங் வரிசையில் தொடர்ந்து வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்து வருகிறார்.

ADVERTISEMENT

ஐபிஎல் 

ஐபிஎல் தொடரில் ராகுலின் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரம்

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் கேப்டனாகச் செயல்பட்ட ராகுல், ஐபிஎல் வரலாற்றில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பேட்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

2018-ல் 659 ரன்கள், 2019-ல் 593 ரன்கள், 2020-ல் 670 ரன்கள் மற்றும் 2021-ல் 626 ரன்கள் குவித்துள்ளார்.

காயம் காரணமாக 2017 சீசனில் விளையாடாத இவர், இதுவரை 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மொத்தம் 5,815 ரன்கள் குவித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

கே.எல்.ராகுல் - ஜிண்டால் உரையாடல்

ADVERTISEMENT