
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கேகேஆர்
செய்தி முன்னோட்டம்
மே 4 அன்று ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் 53வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) எதிர்த்து ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒரு த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்த முக்கியமான வெற்றியின் மூலம், கேகேஆர் தங்கள் பிளேஆஃப் நம்பிக்கையை உயிர்ப்புடன் தக்க வைத்துக் கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர்யின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 11 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 ரன்கள் சேர்த்தார்.
அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி முறையே 30 மற்றும் 44 ரன்களுடன் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர்.
சிறப்பம்சமாக, ஆண்ட்ரே ரஸ்ஸல் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 20 ஓவர்களில் 206/4 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் தடுமாற்றம்
கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறி, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரை விரைவாக இழந்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (34) மற்றும் ரியான் பராக் ஆகியோர் 95) எடுத்து அணியை மீட்டனர். ஷிம்ரான் ஹெட்மியர் 29 ரன்கள் சேர்த்தார், ஆனால் கீழ் வரிசை வீரர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர்.
ராஜஸ்தான் அணிக்கு இறுதிப்பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் ரன் அவுட் ஆனார். இதனால் கேகேஆர் அணிக்கு த்ரில் வெற்றி கிடைத்தது.
வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கேகேஆர் அணிக்காக சிறப்பாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.