Page Loader
ஐபிஎல்லில் 2500+ ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டி நிதிஷ் ராணா சாதனை
ஐபிஎல்லில் 2500+ ரன்கள் எனும் மைல்கல்லை எட்டினார் நிதிஷ் ராணா

ஐபிஎல்லில் 2500+ ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டி நிதிஷ் ராணா சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2023
10:01 am

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஐபிஎல்லில் 2,500 ரன்களை கடந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை தொட 44 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய ராணா, அரைசதம் அடித்து 51 ரன்கள் எடுத்தார். ஐபிஎல்லில் அவர் எடுத்துள்ள 2,500+ ரன்களில், 2,000க்கும் மேற்பட்ட ரன்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக எடுத்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ராணா, தனது முதல் இரண்டு சீசன்களை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி பின்னர் 2018 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.3.4 கோடிக்கு கைப்பற்றியது. அப்போது முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

nitish rana numbers in kkr

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவின் செயல்திறன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 85 போட்டிகளில் விளையாடியுள்ள நிதிஷ் ராணா 2,070 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 அரைசதங்களும் அடங்கும். இதன் மூலம் ரன்களின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவர் இப்போது கெளதம் கம்பீர் (3,035), ராபின் உத்தப்பா (2,439), மற்றும் ஆண்ட்ரே ரசல் (2,185) ஆகியோருக்குப் பின்னால் நான்காவது இடத்தில் உள்ளார். 2018க்குப் பிறகு வேறு எந்த பேட்டரையும் விட கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராக நிதிஷ் ராணாவே உள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில், ராணா 11 ஆட்டங்களில் 300 ரன்களைக் கடந்துள்ளார். மேலும் 2023 சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தால் விலகிய நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.